பக்தனை காக்கத் துடிக்கும் சக்கரத்தாழ்வார்
பக்தனை காக்கத் துடிக்கும் சக்கரத்தாழ்வார்
கஜேந்திரன் என்கிற ஆனை ஆதி மூலமே என்று அழைத்ததும் அதை காக்க கருடனில் ஏறி புறப்பட்ட பெருமாள், பக்தனை காக்க வேண்டும் என்னும் துடிப்பில் வேகமாய்ப் போ வேகமாய்ப் போ என்று கருடனை விரட்டி பார்த்தார், அப்போதும் திருப்தி இல்லாமல் கருடனையும் இழுத்துக்கொண்டு தான் போனார் என்று வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகள் சொல்வார். இன்று சக்ரத்தாழ்வார் பற்றி முகநூல் பதிவில் ஒருவர் எழுதி இருந்தார். பக்தனை காக்க துடித்த சக்ரத்தாழ்வாருக்கு, கருடனை இழுத்துக் கொண்டுவரும் பெருமாளின் வேகமே மெதுவாக தோன்றியதாம். அதனால் பெருமாளின் விரலை விட்டு கிளம்பி தான் மட்டும் முன்னால் சென்று முதலையுன் கழுத்தை கொய்தாராம்

No comments