பக்தி என்றால் என்ன ?
பக்தி என்றால் என்ன ?
பக்தி எனபது நிபந்தனைகள் எதுவுமே இல்லாத ஒரு அன்பு. அப்படி ஒரு அன்பை போதிப்பதே மதம். கடவுளுக்கு அடியவனாக இருப்பதில் இரண்டு நிலை.
குணகிருத தாஸ்யம்: அதாவது கடவுளின் (கருணை போன்ற) குணங்களையும் (நம்மை காத்தல், அருளல்) போன்ற செயல்களையும்(க்ருதம்) நினைத்து/எதிர்பார்த்து அவனுக்கு தாஸனாய் இருப்பது.
சொரூப தாஸ்யம்: கடவுள் சோதித்தாலும், எதையும் நமக்கு தரவில்லை என்றாலும் அவனிடம் அனபாய் இருப்பதே நம் சொரூபமாய்( இயல்பாய்) இருப்பது. இதுவே உன்னத நிலை. இப்படி நிபந்தனைகள் அற்ற அன்பு செலுத்தும் முயற்சியே பக்தி. இத்தகைய பக்தி பக்தனைஅன்பே உருவாக மாற்றி இறை நிலையை அடையச் செய்யும்.

No comments