அவள்தன் அருள் நினைந்தே அழும் குழவி
அவள்தன் அருள் நினைந்தே அழும் குழவி
ஒரு அம்மா கோபத்தில் குழந்தயை அடித்து "பக்கதுல வராத போ" என்று பிடித்து தள்ளினால் அந்த குழந்தை என்ன செய்யும் திரும்பவும் , அம்மாவின் இரண்டு கால்களையும் அணைத்துக் கொண்டு அழும்.
குலசேகர் ஆழ்வார் பெருமாளிடம் சொல்கிறார், நீ எனக்கு என்ன துயரத்தை தந்தாலும் , அடிக்கும் அம்மாவின் கால்களைக் கட்டிக்கொண்டு அழும் குழந்தை போல உன் அருளுக்காகவே ஏங்குவேன்.
விரை என்றால் நறுமணம் ,- வித்துவக்கோடு என்பது ஊர்பெயர், குழவி என்றால் குழந்தை
தரு துயரம் தடாயேல் உன் சரண் அல்லால் சரண் இல்லை*
விரை குழுவும் மலர்ப் பொழில் சூழ் வித்துவக்கோட்டு அம்மானே*
அரி சினத்தால் ஈன்ற தாய்* அகற்றிடினும்* மற்று அவள்தன்
அருள் நினைந்தே அழும் குழவி* அதுவே போன்று இருந்தேனே

No comments