Header Ads

Header ADS

 


மூலமும் நடுவும் ஈறும் இல்லது ஓர் மும்மைத் தாய

காலமும் கணக்கும் நீத்த காரணன் கைவில் ஏந்தி

சூலமும் திகிரி சங்கும் கரகமும் துறந்து, தொல்லை
ஆலமும், மலரும், வெள்ளிப் பொருப்பும் விட்டு அயோத்தி வந்தான் --- கம்ப ராமாயணம்
===================================
பொருள்:
துவக்கம் நடு முடிவு இல்லாத அளவு எண்ணிக்கை போன்ற கணக்குக்கும் அப்பாறபட்ட இந்த உலகுக்கெல்லாம் காரணமான அந்த சக்தி , கையில் வில் ஏந்தி (மும் மூர்த்திகளாக இருந்த போது கையில் வைத்திருந்த) திரி சூலம், சங்கு சக்கரம், கமண்டலம் (பிரம்மா வைத்திருப்பது) எல்லாம் துறந்து , (கிருஷணன் தான் படுத்திருந்த) ஆலிலையையும், (பிரம்மா) தாமரையையும், (சிவன் கைலாய) மலையையும் விட்டு (மும்மூர்த்திகளும் சேர்ந்த ஓர் உருவமாய்) அயோத்தி வந்தான்.
=================

No comments

  மூலமும் நடுவும் ஈறும் இல்லது ஓர் மும்மைத் தாய காலமும் கணக்கும் நீத்த காரணன் கைவில் ஏந்தி சூலமும் திகிரி சங்கும் கரகமும் துறந்து, தொல்லை ஆல...

Powered by Blogger.