ராமனை அழைத்துப் போக பெரும்படையுடன் வந்த பரதனை தூரத்தில் இருந்து பார்த்த குகன் , ராமனுக்கு தீங்கு செய்யவே பரதன் படையுடன் வந்திருக்கிறான் என தப்பாக நினத்த குகன் சொன்ன சொற்கள். சில முறை சத்தமாக படித்துப் பாருங்கள். குகனின் கோபத்தையும், வீரத்தையும் , ராமன் மீது கொண்ட அன்பையும் உணரலாம்.
================================================
ஆழநெடுந்திரை ஆறுகடந்திவர் போவாரோ ?
வேழநெடும்படை கண்டு விலங்கிடும் வில்லாளோ ?
தோழமை என்று அவர் சொல்லிய சொல் ஒரு சொல்லன்றோ ?
ஏழைமை வேடன் இறந்திலன் என்று எனை ஏசாரோ
==================================================
திரை = அலை
வேழம்= யானை
இந்த ஆழமான அலை வீசும் ஆற்றை இவர்கள் கடந்து போய்விடுவார்களா ? பெரிய யானைப் படையை கண்டால் பயந்து விலகி வழிவிட்டுவிடுவேனா ? தோழமை என்று சொல்லிய ராமனுக்காக சண்டையிட்டு சாகவில்லை என்றால் இந்த ஊர் நம்மை ஏசாதோ..!!
ராமனுக்கும் குகனுக்கும் தோழமை ஒரு நாள்தான். அதற்காக உயிரைத்தர குகன் தயார் என்றால் ராமன் பழகிய விதம் அப்படி. குகனுக்கு இலக்குவனையும் சீதையையும் அறிமுகப் படுத்த ராமன் குகனிடம் சொன்ன வார்த்தைகள், இது தான் உன் தம்பி இலக்குவன், இது தான் உன் கொழுந்தியா சீதை" (நீ எனக்கு அண்ணன் எனபதை அவ்வளவு உறுதியாக சொல்கிறார்)
No comments