Header Ads

Header ADS

நாலு வரியில் சுந்தரகாண்டம்

சுந்தர்காண்டத்தின் சுருக்கம் நாலு வரியில் கம்பன் எழுதியது. மிகவும் புகழ் பெற்ற பாடல். எல்லாருக்கும் தெரிந்திருக்கலாம். சுந்தரகாண்டத்தை முழுவதும் படிப்பது சிறப்பு. வாய்ப்பு இல்லாதவர்கள் தினமும் இந்தப் பாடலை சொல்லலாம். நிச்சம் அனுமான் நம்மை காப்பார்.


----------------------------------------------------------------------
அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத்தாவி
அஞ்சிலே ஒன்று ஆறாக ஆரியற்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்குகண்டு அயலார் ஊரில்அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் எம்மை அளித்துக் காப்பான்

------------------------------------------------------
அஞ்சிலே ஒன்று பெற்றான் - ஐம்பூதங்களில் ஒன்றான வாயு பெற்ற மகன்

அஞ்சிலே ஒன்றைத்தாவி -- ஐம்பூதங்களில் ஒன்றான நீரை (கடலை) தாவி

அஞ்சிலே ஒன்று ஆறாக --- ஐம்பூதங்களில் ஒன்றான ஆகாயம் வழயியாக (ஆறு என்றால் வழி)

அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்குகண்டு --- ஐம்பூதங்களில் ஒன்றான பூமி பெற்ற அணங்கை( அணங்கு என்றால் பெண் தெய்வம்) கண்டு

அயலார் ஊரில்அஞ்சிலே ஒன்றை வைத்தான் --- ஐம்பூதங்களில் ஒன்றான நெருப்பை அயலார் (அந்நியர்கள்) ஊரில் வைத்தான்

அவன் எம்மை அளித்துக் காப்பான் --அவன் என்னை வேண்டியவற்றை அளித்து காப்பாற்றுவான். 

No comments

  மூலமும் நடுவும் ஈறும் இல்லது ஓர் மும்மைத் தாய காலமும் கணக்கும் நீத்த காரணன் கைவில் ஏந்தி சூலமும் திகிரி சங்கும் கரகமும் துறந்து, தொல்லை ஆல...

Powered by Blogger.