Header Ads

Header ADS

தமிழ் விளக்கேற்றிய மூவர்

 .


திருக்கோவலூரில், மழைக்காக மிருகண்டு முனிவர் வீட்டின் திண்னையில் ஒருவர் ஒதுங்கினார். சிறிது நேரத்தில் மேலும் ஒருவர் வந்து ஒதுங்கினார். அடுத்து மூன்றாவதாக ஒருவர் வந்து ஒதுங்கினார். மூன்று பேரும் இருட்டில் நிற்கையில் அவர்களோடு நான்காவதாக ஒருவர் நெருக்கமாக நிற்பதாய் தோன்றியது யாரென்று தெரியவில்லை. யாரென்று பார்க்க முதலில் வந்த பொய்கையாழ்வார் தன் தமிழால் விளக்கேற்றினார்
------------------------------------------------------------------------------
வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காகச் - செய்ய
சுடர் ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை
இடர்ஆழி நீங்குகவே என்று
தகளி -அகல் , வெய்ய கதிரோன் -வெப்பமான கதிருடைய சூரியன், சுடர் ஆழியான் (ஆழி என்பதற்கு இங்கே சக்கரம் என்று பொருள் சுடராழியான் என்பது ஒளிரும் சக்க்ராயுத்தை கொண்ட கிருஷ்ணன், இடர் ஆழி -துன்பக்கடல் (ஆழி என்றால் கடல்)
இப்போது உருவம் கொஞ்சம் லேசாக தெரிகிரது ஆனால் சரியாகத் தெரியவில்லை . இன்னொரு விளக்கேற்றலாம், ஆனால் பொய்கையாழ்வார் வையத்தை விளக்காக்கி , கடலையும் நெய்யாக்கி சூரியனையே அதில் சுடராக விளக்கேற்றிவிட்டார், அதற்கு இணையாக இன்னொரு விளக்கா எப்படி ஏற்றுவது ?
பூதாத்தாழ்வார் தன் தமிழால் ஏற்றினார்
-------------------------------------------------------------------------
அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா - நன்புருகி
ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ் புரிந்த நான்
நாரணற்கு – நாராயணனுக்கு
-----------------------------------------------------------------------------------------------
இரணடு பேர் விளக்கேற்றிவிட்டார்கள். வந்திருப்பது யார் என்று மூன்று பேரும் பார்த்துவிட்டார்கள். மூன்றாவதாய் பாடிய பேயாழ்வார் நம் மீது இருக்கும் கருணையால் தான் பார்த்த நாராயணணை தன் பாடலால் நம்க்கும் காட்டுகிறார். அதனலாயே திருவரங்கத்தமுதானர் இராமானுஜ நூற்றந்தாதியில்
“கோவலுள் மாமலராள் தன்னொடு மாயனைக் கண்டமை காட்டும் தமிழ்த்தலைவன்"
என்று பேயாழ்வாரை குறிப்பிடுகிறார்”
பேயாழ்வார் பாடிய பாடல்.
திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன், திகழும்
அருக்கன் அணிநிறமும் கண்டேன், – செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் புரி சங்கம் கைக்கண்டேன்,
என்னாழி வண்ணன்பால் இன்று.
=====================================================================
ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாயத்யத்தில் முதலில் தாயார் தரிசனம் அதன் பிறகே பெருமாள் தரிசனம். அதனால் திருக்கண்டேன் என்று துவங்குகிறார். "திரு" என்ரால் திருமகள். பெருமாளில் மார்பில் திருமகள் இருப்பதாய் சாஸ்திரங்கள் சொல்கிறது.
அருக்கன் என்றால் சூரியன் (இங்கு சூரியன் போல ஒளி வீசும்)
செரு என்றால பகை அல்லது போர் , செருக்கிளரும் என்றால் பகை/போர் வந்தால் கிளர்ந்து எழுகிற பொன்னாழி (தங்க சக்கரம்)
புரிசங்கம் -- வலம்புரி சங்கு
ஆழி வண்ணன் (ஆழி என்றால் இங்கு கடல் என்று பொருள்)

No comments

  மூலமும் நடுவும் ஈறும் இல்லது ஓர் மும்மைத் தாய காலமும் கணக்கும் நீத்த காரணன் கைவில் ஏந்தி சூலமும் திகிரி சங்கும் கரகமும் துறந்து, தொல்லை ஆல...

Powered by Blogger.