Header Ads

Header ADS

தமிழ்த் தலைவன் அப்படின்னு ஒருத்தர் இருக்காரா ?



தமிழ்த் தலைவன் அப்படின்னு ஒருத்தர் இருக்காரா ?

பேயாழ்வார் தான் தமிழ்த்தலைவன் என்று திருவரங்கத்தமுதானார் சொல்கிறார்.
.
அதே பாட்டில் செலவம் உடைய்வர்கள் யார் என்றும் திருவரங்கத்து அமுதனார் சொல்கிறார்.
தமிழ்த்தலைவனுடைய பொன்னடிகளை போற்றும் இரமானுஜரிடம் பக்தி்
கொண்டவர்களின் பாதங்களை தங்கள் தலைமேல் சூடியிருப்பவ்ர்களே திருவுடையவர்கள்
=================================
மன்னிய பேரிருள் மாண்டபின் கோவலுள் மாமலராள்
தன்னொடு மாயனைக் கண்டமை காட்டும் தமிழ்த்தலைவன்
பொன்னடி போற்றும் இராமா னுசற்கன்பு பூண்டவர்தாள்
சென்னியிற் சூடும் திருவுடை யாரென்றும் சீரியரே
==========================================
பொய்ழ்கை ஆழ்வாரும் பூதத்தாழ்வாரும் வையம் தகழியா, அன்பே தகழியா என்று இருட்டை விலக்க திரிகோவிலூரில் விளக்கேற்றியதும், பெருமாளை கண்டு தான் கண்டதை திருக்கண்டேன் என்கிற பாடல்மூலம் நம்க்கு காட்டிட பேயாழ்வார் என்பதால்
.
கோவலுள் மாமலராள்
தன்னொடு மாயனைக் கண்டமை காட்டும் தமிழ்த்தலைவன்
என்று குறிக்கிறார் திருவரங்கத்து அமுதானார்

1 comment:

  மூலமும் நடுவும் ஈறும் இல்லது ஓர் மும்மைத் தாய காலமும் கணக்கும் நீத்த காரணன் கைவில் ஏந்தி சூலமும் திகிரி சங்கும் கரகமும் துறந்து, தொல்லை ஆல...

Powered by Blogger.